Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் காபூல் அருகே பூமிக்கு அடியில் 130 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவானது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 1400 பேர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவில் 6.3 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பலமுறை நில அதிர்வு ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாநிலத்தை மையமாகக் கொண்டு, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று ரிக்டர் அளவில் 6.3 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பலமுறை நில அதிர்வுகளும் உணரப்பட்டன. இந்த கோர சம்பவத்தில் குனார், லக்மான், நங்கர்ஹார் மற்றும் நூரிஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் 1,100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகவும், 3,500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, சுமார் 12,000 மக்கள் இந்த நிலநடுக்கத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக, இந்தியத் தூதரகத்தின் மூலம் 1000 குடும்ப கூடாரங்கள் காபூலுக்கும், 15 டன் உணவுப் பொருட்கள் காபூலிலிருந்து குனார் பகுதிக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அரிசி மூட்டைகளுடன் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வானங்களை படங்களை வெளியிட்ட இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்த இக்கட்டான நேரத்தில் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா துணை நிற்கும் என்று உறுதியளித்துள்ளது.