பெஷாவர்: பாகிஸ்தானுக்கும், ஆப்கனுக்கும் எல்லை பிரச்னை உள்ளது. இதனால் பாகிஸ்தானில் வசித்து வந்த லட்சக்கணக்கான ஆப்கன் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதை தொடர்ந்து ஆப்கன் எல்லை பகுதியில் இருக்கும் பாக். பகுதிகளில் அடிக்கடி கிளர்ச்சிக்குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் ஆப்கன் வான்வெளி எல்லையில் அத்து மீறி புகுந்த பாக். விமானங்கள் அங்குள்ள பாக்டிகா மாகாணத்தில் உள்ள ஒரு சந்தையில் குண்டு வீசி உள்ளன. மேலும் காபூலிலும் தாக்குதல் நடத்தி உள்ளன. இது பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி கூறும்போது,’ பாகிஸ்தான் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம், எடுப்போம்’ என்றார்.
+
Advertisement