இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் அக்டோபர் 9ம் தேதி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் மோதல் வெடித்தது. எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இதனையடுத்து இரு நாட்டுக்கும் இடையிலான எல்லையில் அமைதியை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் துருக்கி மற்றும் கத்தார் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் இருநாட்டு பிரதிநிதிகளும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் மூன்றாவது சுற்று துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்தது. வியாழக்கிழமை தொடங்கிய பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நேற்று முன்தினம் இரவு முடிவுக்கு வந்தது. நான்காவது சுற்று பேச்சுவார்த்தை குறித்த எந்த திட்டமும் இல்லாமல் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது.
+
Advertisement

