புதுடெல்லி: வரும் 2027ல், சவுதி அரேபியாவில் ஏஎப்சி ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்பதற்கான இறுதி தகுதிச் சுற்றுப் போட்டி வரும் 9ம் தேதி சிங்கப்பூரில் நடக்கவுள்ளது. அதில், சிங்கப்பூர் அணியுடன் மோதும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 23 வீரர்கள் பட்டியலை இந்திய தேசிய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் காலித் ஜமில் வெளியிட்டார். சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணியில் முன்கள தடுப்பாளர்களாக அன்வர் அலி, ஹிமிங்தவ்மவியா ரால்தே, முகம்மது உவைஸ், பரம்வீர், ராகுல் பேகே, சந்தேஷ் ஜிங்கான் உள்ளனர். நடுகள வீரர்களாக பிரான்டன் பெர்னாண்டஸ், டேனிஸ், பரூக் பட், தீபக் தாங்ரி, மேக்கார்டன் லூயிஸ் நிக்சன், மகேஷ் சிங் நவோரெம், நிகில் பிரபு, சகல் அப்துல் சமத், உதன்டா சிங் குமாம் இடம்பெற்றுள்ளனர். முன்கள வீரர்களாக பரூக் சவுத்ரி, லாலியன்ஸுவாலா சாங்டே, லிஸ்டன் கோலாகோ, ரஹிம் அலி, சுனில் சேத்ரி, விக்ரம் பிரதாப் சிங் ஆடுவர்.
+
Advertisement