சென்னை: அடையார் முதல் மேற்கு தாம்பரம் வரைமக்கள் பயன்பாட்டிற்காக 7 புதிய பஸ்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். அடையார் முதல் மேற்கு தாம்பரம் பேருந்து நிலையம் வரை எண் 96-ஐ கொண்ட 7 பேருந்துகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் மா. சுப்பிரமணியம் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பேருந்தில் சிறிது தூரம் பயணித்தார்.
இந்த புதிய கூடுதல் பேருந்துகள் அடையார், திருவான்மியூர், பெருங்குடி , துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், மேடவாக்கம், வேங்கைவாசல், செம்பாக்கம், காமராஜபுரம், சேலையூர், கிழக்கு தாம்பரம் மற்றும் மேற்கு தாம்பரம் இடையே இயக்கப்படும். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். இந்த நிகழ்ச்சியில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சென்னை மாநகராட்சி 14வது மண்டல சேர்மன் ரவிச்சந்திரன், மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் பங்கேற்றனர்.


