"கெடுவான் கேடு நினைப்பான்" .. செங்கோட்டையன் மீதான எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை குறித்து டிடிவி தினகரன் கருத்து
சென்னை : அதிமுகவில் இருந்து அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை குறித்து கெடுவான் கேடு நினைப்பான் என பதில் அளித்தார். மேலும், "எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டு வருபவர் செங்கோட்டையன். செங்கோட்டையனை பொறுப்பில் இருந்து நீக்கியது எடப்பாடிக்குதான் பின்னடைவு,"இவ்வாறு தெரிவித்தார்.