சென்னை : டி.டி.வி. தினகரனை சந்திக்கவில்லை என அதிமுக மாஜி அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் சிகிச்சை பெறும் தனது மனைவியை சந்திக்கவே சென்றிருந்ததாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டி.டி.வி. தினகரனை செங்கோட்டையன் சந்தித்ததாக செய்தி வெளியானது. டி.டி.வி. தினகரனுடன் ஒருமணி நேரம் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.
+
Advertisement