பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க 10 நாள் கெடு விதித்த நிலையில், அதிமுகவில் அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்!!
சென்னை: பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க 10 நாள் கெடு விதித்த நிலையில், அதிமுகவில் அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி, அதிமுக பொதுச் செயலாளர் இ.பி.எஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். அதிமுகவில் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக செங்கோட்டையன் பதவி வகித்தார்.