திண்டுக்கல் : பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் நிபந்தனையை ஏற்க இபிஎஸ் மறுப்பு என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க முடியாது எனவும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல்லில் மூத்த நிர்வாகிகளுடன் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
+
Advertisement