Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத கடந்த முறையை விட இம்முறை கூடுதலாக 17% விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத கடந்த முறையை விட இம்முறை கூடுதலாக 17% விண்ணப்பங்கள் வந்துள்ளன. டெட் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், டெட் தேர்வு விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளது. நவ.15,16 தேதிகளில் நடைபெறும் டெட் தேர்வு எழுத 4.77 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்​கான இணை​யதள விண்​ணப்ப பதிவு கடந்த ஆக. 11-ம் தேதி தொடங்கி செப்​. 10-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது. தேர்வு எழுத 4.77 லட்​சம் பேர் வரை விண்​ணப்​பித்​துள்​ளனர்.

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான டெட் தேர்வை அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இத்தேர்வை எழுத விரும்புகிறவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு வரும் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளது.

தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க விரும்​பும் இடைநிலை ஆசிரியர்​களும், பி.எட். முடித்த பட்​ட​தாரி ஆசிரியர்​களும் https://trb.tn.gov.in என்ற இணை​யதளம் வாயி​லாக ஆன்​லைனில் மாலை 5 மணிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெறும் இறுதி ஆண்டு மாணவர்​கள், பி.எட். இறுதி ஆண்டு படிப்​பவர்​களும் டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கலாம்.

அரசுப் பள்ளி மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களில் ஆசிரிய​ராக பணிபுரிய​வும், பதவி உயர்வு பெற​வும் டெட் தேர்​வில் தேர்ச்சி பெறு​வது கட்​டா​யம் என்று சென்னை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்து உச்ச

நீதி​மன்​றம் சமீபத்​தில் தீர்ப்​பளித்​துள்​ளது. எனவே, ஆசிரியர்​கள் டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க வசதி​யாக கால அவகாசம் நீட்​டிக்கப்பட்டது. இதன் காரண​மாக, தற்​போது நடை​பெற உள்ள டெட் தேர்வை எழுது​வதற்கு ஆயிரக்​கணக்​கான ஆசிரியர்​களும் விண்​ணப்​பித்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது. மேலும், டெட் தேர்வு விண்​ணப்​பங்​களில் திருத்​தம் செய்​வதற்​கான அவகாசம் செப்​. 13 நிறைவு பெற்றது.

இந்நிலையில் கடந்த முறையை விட இம்முறை கூடுதலாக 17% விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த 4 முறை நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளைவிட இம்முறை அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதுவரை நடந்த 6 டெட் தேர்வுகளில் 2014இல் அதிகபட்சமாக சுமார் 6.50 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.