சென்னை: சீனாவில் இருந்து சென்னை காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கு கப்பலில் ரசாயனம் ஏற்றி வந்த 90 சரக்கு பெட்டகங்கள் மாயமானதாக ஹாங்காங் நிறுவனத்தின் தமிழ்நாடு சிஇஒ சுப்பிரமணியன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். போலி ஆவணங்களை காட்டி 90 சரக்கு பெட்டகங்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
+
Advertisement