அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அதானி - கூகுள் ஏஐ தரவு மையங்களை அமைக்க 480 ஏக்கர் நிலத்தை ஆந்திர அரசு ஒதுக்கி உள்ளது. கூகுள் நிறுவனமான ரெய்டன் இன்ஃபோடெக் நிறுவனம் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களை அமைக்க உள்ளது. இந்நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம் மற்றும் அனகாபல்லி மாவட்டங்களில் செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களை அமைப்பதற்காக 480 ஏக்கர் நிலத்தை ஆந்திர அரசு ஒதுக்கி உள்ளது. இதற்கான முன்மொழியை ஆய்வு செய்த பின்னர், கடந்த 28ம் தேதி நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது” என ஆந்திர அரசு கடந்த 2ம் தேதி வௌியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆந்திரபிரதேசத்தில் ரூ.87,500 கோடிக்கும் அதிகமான மொத்த முதலீட்டில் படிப்படியாக டேட்டா சென்டர்களை அமைக்க உள்ள ரெய்டன் இன்ஃபோடெக் இந்தியா பிரைவேட் லிமிடெட், குறிப்பிட்ட காலத்துக்கு மாநில அரசிடமிருந்து ரூ.22,000 கோடியை ஊக்கத்தொகையாக திரும்ப பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement

