அதானி குழும நிர்வாகிகளுக்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
வாஷிங்டன்: அதானி குழும நிர்வாகிகளுக்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்துள்ளது. அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மோசடி செய்து அதானி குழுமம் நிதி திரட்டிய புகாரை விசாரித்து வரும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆணையம், இந்திய அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நியூயார்க் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.