அதானி நிறுவனம் பற்றி எழுத 4 மூத்த பத்திரிகையாளர்களுக்கு விதித்த தடையை நீக்கியது டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம்!!
டெல்லி: அதானி நிறுவனம் பற்றி எழுத 4 மூத்த பத்திரிகையாளர்களுக்கு விதித்த தடையை டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம் நீக்கியது. அதானி நிறுவனம் பற்றி பத்திரிகையாளர்கள் ரவி நாயர், ஆபிர் தாஸ் குப்தா, அயஸ்காந்த் தாஸ், ஆயுஷ் ஜோஷி எழுத கீழமை நீதிமன்றம் விதித்த தடையை டெல்லி மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்தது. அதானி நிறுவனங்கள் குறித்த கட்டுரைகள் பல காலமாக பொதுவெளியில் காணப்படுகின்றன. பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கும் முன்பு அவர்களது கருத்தை கீழமை நீதிமன்றம் கேட்காதது தவறு என மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.