அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது: நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு
டெல்லி: அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். டி சர்ட், பாத்திரங்கள், ஜாரில் ஐஸ்வர்யா ராய் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அனுமதியின்றி தனது புகைப்படங்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி ஐஸ்வர்யா ராய் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தடை விதிக்க உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி உறுதி அளித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.