மும்பை: குஷி முக்ஹெர்ஜீ 28 வயது 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளியான அஞ்சல் துறை என்ற திரை படம் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு தெலுங்கில் டோங்கா பிரம, ஹார்ட் அடக்க, மற்றும் ஹிந்தியில் சிங்கர் போன்ற படங்களில் நடித்திருந்தார் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலர் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் குஷி பெரும் புகழ் பெற்றார்.
சமீபத்தில் ரியாலிட்டி ஷோவிலும் அவர் பங்கேற்றிருந்தார். மும்பையில் வசித்து வந்த குஷி முக்ஹெர்ஜீ தனது வீட்டில் பணியாற்றிய பணியாளி ஒருவர் 25 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடி சென்று விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். தான் வாழ்வின் மிகவும் மனதை நொறுக்கும் அனுபவங்களில் ஒன்று இது என்று குறிப்பிட்டுள்ள அவர் திருட்டு சம்பவத்திற்கு பிறகு சம்மந்தப்பட்ட பணியாளர் தலைமறைவாகி விட்டதாக கூறி உள்ளார்.
முன்னதாக சென்னையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த வீட்டிலும் இதை போன்ற ஒரு சம்பவம் நடைபெற்று பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. விலை மதிபெற்ற நகைகள் திருடபட்டது ஒரு புறம் இருந்தாலும் ஒருவருக்கு ஏற்படும் நம்பிக்கை இழப்பு தான் தன்னை அதிகம் பாதிப்பதாக குஷி கூறிஉள்ளார்.
சமூக வலைத்தளங்களில் போட்டோக்களை வெளியிட்டு சமீபத்தில் கவனம் பெற்ற குஷி முக்ஹெர்ஜீ நாம் நம்பிய ஒருவர் இப்படி துரோகம் செய்வது மனதை உடைகிறது. நகைகளை விட பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வு தான் என்னிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
என்று வேதனை உடன் கூறிஉள்ளார். இந்த துரோகம் தன்னை உலுக்கி எடுத்திருந்தலும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக குஷி முக்ஹெர்ஜீ உறுதியாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் இன்னும் கொடுக்கப்படவில்லை முறை படி புகார் பதிவுசெய்யப்பட்டதும் காவல் துறையினர் காணாமல் போன பணியாளரை கண்டு பிடித்து விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.