Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சென்னை : பட்டியலின மக்களை அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட வழக்கில், நடிகை மீரா மிதுனை கைது செய்து ஆகஸ்ட் 11ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிடிவாரண்ட் பிறப்பித்து 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மீரா மிதுன் டெல்லியில் இருப்பதாகவும், அவரை மீட்கக் கோரியும் அவரது தாய் மனு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி, டெல்லி போலீசாரால் பிடிக்கப்பட்ட மீரா மிதுன், அங்குள்ள அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.