கோவை : கோவை விமான நிலையத்தில் பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று அளித்த பேட்டி: காதல் புனிதமானது என்ற கமல்ஹாசன், தற்போது கூட்டணி புனிதமானது என்கிறார். விஜய்க்கு நல்ல கூட்டம் வருகிறது. அவர் நடிகர், நாங்க டாக்டர். விஜய்க்கு வந்த கூட்டம் ஓட்டாக மாறுமா? என தெரியாது. அவர் நடிகர் என்பதால் வேடிக்கை பார்க்க கூட்டம் வருகிறது. விஜய் நன்றாகத்தான் பேசுகிறார். நன்றாக நடிக்கிறார்.
2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும். தேஜ கூட்டணியில் குழப்பம் இல்லை. அதிமுகவில் இருந்து விலகியவர்களை இணைப்பது குறித்து என்னால் கருத்து கூற முடியாது. ஆனால், அனைவரும் இணைந்து போட்டியிட வேண்டும் என்பது எனது விருப்பம்.
எங்கள் கட்சியில் அணிகள் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எந்த கொள்கை உள்ள தலைவராக இருந்தாலும் மரியாதை குறைவாக ஒருமையில் பேசக்கூடாது. உண்மையான தமிழர்களாக இருந்தால் மரியாதையுடன் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.