குடியாத்தம்: தன்நெஞ்சே தன்னை சுடுகிற காரணத்தால் நடிகர் விஜய் வெளியில் வர பயப்படுவதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மோர்தானா கிராமத்தில் உள்ள அணையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவரிடம், விஜய் வீடியோ காலில் ஆறுதல் சொன்னது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கூறியதாவது: கரூர் சம்பவத்தில் குற்றம் புரியவில்லை என்றால் தவெக தலைவர் நடிகர் விஜய், தைரியமாக அவருடைய தொண்டர்களின் வீடுகளுக்கே சென்று ஆறுதல் சொல்லி இருக்க முடியும். தன்நெஞ்சே தன்னை சுடுகிற காரணத்தால் வெளியில் வர நடிகர் விஜய்க்கு பயம். எனவே நேரடியாக சென்று பார்க்க முடியாமல் வீடியோ கால் மூலம் பேசி வருகிறார். கச்சத்தீவு தொடர்பாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ள கருத்து அவருக்கு ஒன்றும் தெரியாது. யாரோ எழுதிக் கொடுத்து இவர் பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
+
Advertisement