பெங்களூரு: கன்னட நடிகர் உபேந்திரா வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது, ‘ஆன்லைன் விளம்பரம் மூலமாக அறியாத எண்ணில் இருந்து வந்த ஒரு குறுஞ்செய்தியை எனது மனைவி நடிகை பிரியங்கா திறந்துபார்த்துள்ளார். இதன் மூலம் சைபர் மோசடிக்காரர்கள் வலையில் விழுந்தார். நானும் அதே போல் எனது போனில் சைபர் மோசடிக்காரர்களிடம் சிக்கினேன். இதனால் எங்கள் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதனால் எங்கள் போன் எண்ணில் இருந்து குறுஞ்செய்தி, அழைப்புகள் வந்தாலோ, பணம் கேட்டாலோ அதற்கு பதிலளிக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
+
Advertisement