சென்னை: ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஜூன் 12ம்தேதி வெளியாகும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஒரு வாரமாக, கோவையில் நடந்த ஜெயிலர் இரண்டாம் பாகம் படப்பிடிப்பை முடித்து விட்டு, நேற்று கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயிலர் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது. நடிகர் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்கு வாழ்த்துகள். ஜூன் 12ம் தேதி ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.