சென்னை: நடிகர் கமல் நடித்த குணா படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர், குணா படத்தை மறு வெளியீடு செய்ய பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கும் நிரந்தர தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், குணா படத்தை மறுவெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்தார். மேலும், இந்த மனுவுக்கு ஜூலை 22ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
Advertisement