புதுடெல்லி: இந்தியில் ஔிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆஷிஷ் கபூர்(39) இவர் மீது டெல்லியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் டெல்லி காவல்நிலையத்தில் பாலியல் பலாத்கார புகாரளித்திருந்தார். அந்த புகாரில், விருந்து நிகழ்ச்சி ஒன்றில் தனக்கான பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து ஆஷிஷ் கபூரும், அவரது நண்பர்களும் தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக தெரிவித்திருந்தார்.
அவரை காவல்துறை கைது செய்தது. இதனிடையே, ஆஷிஷ் கபூர் மட்டுமே தன்னை பலாத்காரம் செய்ததாக புகாரளித்த பெண் மாற்றி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டை எதிர்த்து நடிகர் ஆஷிஷ் கபூர் டெல்லி உயர் நீதிமனறத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.