சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்க போவதாகவும் தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் நடிகர் அஜித் வீட்டிற்கு விரைந்தனர். அங்கு, தீவிர சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேர சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதனால், இந்த மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement
