சென்னை: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், மந்தைவெளியில் வசித்து வரும் நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடி குண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பட்டினப்பாக்கம் போலீசார் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் எஸ்.வி.சேகர் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் உதவியுடன் தேடி வருகின்றனர்.