Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடிகர் ஸ்ரீ மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார்: தவறான தகவல்கள் பரப்புவதை தவிர்க்குமாறு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அறிக்கை

சென்னை: நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீ குடும்பத்தினரின் அறிக்கையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். 2012-ம் ஆண்டு வெளியான 'வழக்கு எண் 18/9' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீ. அதனைத்தொடர்ந்து 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்','வில் அம்பு', 'மாநகரம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'இறுகப் பற்று' படத்தில் இவர் கடைசியாக நடித்திருந்தார்.

இதனையடுத்து அவர் எந்த படத்திலும் நடிக்காதநிலையில், சமீபத்தில் அவருடைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் உடல் எடை மெலிந்த தோற்றத்தில் அவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் நடிகர் ஸ்ரீ போதை பழக்கத்திற்கு அடிமை ஆகிவிட்டாரோ எனவும் கூறினர். இந்நிலையில், நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர்களின் ஆலோசனைகளின்படி சமூகவலைதளங்களின் இருந்து விலகி இருப்பதாகவும் குடும்பத்தினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.