லடாக்: பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார் ரன்வீர் சிங். இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘துருந்தர்’. இயக்குனர் ஆதித்ய தர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லே-லடாக்கில் நடந்து வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்புத் தளத்திலிருந்து அதிர்ச்சியான தகவல் நேற்று வெளியானது. படப்பிடிப்பில் பணியாற்றிய சுமார் 120 படக்குழுவினர் லேயில் உள்ள மருத்துவமனையில் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டனர்.
அனைவருக்கும் ஃபுட் பாய்சன் ஏற்பட்டதே காரணம். தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, விசாரணை நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகள் கூறுகையில், மருத்துவர்கள் இது ஃபுட் பாய்சன் என்று உறுதிப்படுத்தினர். அந்த இடத்தில் சுமார் 600 பேர் உணவு உண்டதாகவும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.