நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்துக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு: செப்.8ல் விசாரணை
சென்னை: நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்துக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், அனுமதின்றி பயன்படுத்திய பாடல்களை நீக்கவும் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினோம். சட்டப்பூர்வ உரிமையாளரிடம் அனுமதி பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் கூறியது. இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி பாடலை பயன்படுத்தியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இளையராஜா தொடர்ந்த வழக்கு செப்.8ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.