கதக்: கதக் நகரில், தங்களது கார்களில் சிலர், பாகிஸ்தான் கொடியுடன் சுற்றித் திரிந்தனர். மேலும், இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இது தொடர்பாக கதக் நகர போலீசார், கடந்த 7ம் தேதி, தன்னிச்சையாக வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் கைது செய்யவில்லை. இதற்கிடையே, போலீசார் நடத்திய விசாரணையில், காரின் பேனட்டில் பாகிஸ்தான் கொடி காட்சிப்படுத்தப்பட்டு, தஹ்சீன் என்ற நபரின் இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து பதிவேற்றப்பட்டது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘பாகிஸ்தான் கொடியை காரில் பறக்க வைத்து சென்ற சம்பவம், சமூகத்தின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் செயல். மேலும், நல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவிக்கும் செயலாக கருதி, பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவுகள் 299, 353(2), ஆர்/டபிள்யூ 3/5ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை, இதுவரை கைது செய்யவில்லை. நாட்டின் உணவை சாப்பிட்டு நாட்டை காட்டிக் கொடுப்பவர்கள் தண்டிக்க வேண்டும்’ என்றனர்.