தஞ்சாவூர்: தஞ்சாவூர் பூதலூர் கூடம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர், ஜெர்மன் நாட்டில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இவருடன் ஜெர்மன் நாட்டை சேர்ந்த விலினா பெர்கன் என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்துள்ளார். ஒன்றாக பணிபுரிந்த இருவருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தொடர்ந்து இரண்டு பேருடைய பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று தமிழ் முறைப்படி தஞ்சாவூரில் இவர்களது திருமணம் நடைபெற்றது. அப்போது, பாரம்பரிய முறைப்படி மணமகள் விலினா பெர்கன் மருதாணி போட்டு கொண்டும், பட்டுப்புடவை அணிந்தும் அமர்ந்தார். தமிழ் முறைப்படி அவருக்கு, விக்னேஸ்வரன் திருமாங்கல்யம் அணிவித்தார். திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் மேடையில் கீழே இறங்கி பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த உறவினர்கள், நண்பர்களிடம் வாழ்த்துக்களை பெற்றனர்.
+
Advertisement 
 
 
 
   