திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன்(101) திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் காலமானார். திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ஏகேஜி சென்டரில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
நேற்று காலை 9 மணியளவில் திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் உள்ள தர்பார் அரங்கிற்கு அச்சுதானந்தன் உடல் கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராய் விஜயன், தமிழ்நாடு அமைச்சர் ரகுபதி உட்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். மதியம் 2.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட கேரள அரசு பஸ்சில் ஆலப்புழாவிற்கு உடல் எடுத்து செல்லப்பட்டது. இன்று ஆலப்புழாவில் உள்ள மயானத்தில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.