சென்னை: சாலைகளில் மிக ஆபத்தான நேரம் எது தெரியுமா?. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலான இந்த மூன்று மணி நேரங்கள் தான். சாலைகளில் அதிகா விபத்து ஏற்பட கூடிய நேரம். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவலின் படி 2023ம் ஆண்டில் மொத்தம் 4.64 லட்சம் விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 21% விபத்துகள் அதாவது 96,000 விபத்துகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலான நேரத்தில் பதிவாகியுள்ளன.
இதை தொடர்ந்து அதிக விபத்துகள் நிகழும் நேரமாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான நேரமும் உள்ளது. 2023ம் ஆண்டில் சாலை விபத்துகளில் மொத்தம் 1.73 லட்சம் நபர்கள் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகள் தான் சாலை விபத்துகளில் அதிக எண்ணிக்கையில் உயிரிழக்கின்றனர். 2023ம் ஆண்டின் தகவலின் படி சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் 79,500 நபர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள். அதிக விபத்து பதிவான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2023ல் 67,000 விபத்துகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளன.
