கொடைக்கானல்: மலேசிய வாழ் தமிழர்கள் 10க்கும் மேற்பட்டோர் நேற்று திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி மலைக்கோயிலில் தரிசனம் முடித்து விட்டு பழநி மலைச்சாலை வழியாக கொடைக்கானல் நோக்கி சுற்றுலா வேனில் சென்று கொண்டிருந்தனர்.
பேத்துப்பாறை அருகே வெள்ளைப்பாறை பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து உருண்டு விபத்திற்குள்ளானது. இதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.