மும்பை: 19வது ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் டிசம்பர் 16ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நடைபெற உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3வது முறையாக வெளிநாட்டில் ஏலத்தை பிசிசிஐ நடத்த உள்ளது. கடந்த 2023ல் துபாய், 2024ல் ஜெட்டாவில் ஐபிஎல் ஏலம் நடத்தப்பட்ட குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பரஸ்பர வர்த்தகம் பரிமாற்றத்தின் படி குஜராத் அணியில் உள்ள ஷெபான் ரூதர்போர்ட்டை ரூ.2.6 கோடிக்கு மும்பை அணி வாங்கியது. இதேபோல், லக்னோர் வீரர் ஷர்துல் தாக்கூரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2 கோடிக்கு வாங்கியது.
சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஜடேஜா மற்றும் சாம் கரனை சிஎஸ்கே ராஜஸ்தான் அணிக்கு விட்டு தர முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், மும்பை அணியில் உள்ள சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்காரை, லக்னோ அணி வாங்க முடிவு செய்து உள்ளது. பஞ்சாப் அணியில் உள்ள ஆஸி வீரர்கள் மேக்ஸ்வெல், ஸ்டோய்ன்ஸ் ஆகியோரை கழற்றிவிட அந்த அணி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
