துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. அந்த வகையில், ஆசிய கோப்பையில் (3 அரை சதங்களுடன் 314 ரன்கள்) சிறப்பாக விளையாடியதற்காக செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக (ஒரு சதத்துடன் 308 ரன்கள்) மகளிருக்கான செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
+
Advertisement