அப்துல்கலாம் பல்கலைக்கழக விவகாரம் கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு: ஒரு வாரத்தில் துணைவேந்தரை நியமிக்க உத்தரவு
புதுடெல்லி: அப்துல் கலாம் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிப்பதில் ஆளுநர் காலம் தாமதம் செய்வதாகசெய்வதாக கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பர்திபாலா, விஸ்வநாதன் அமர்வு ஓய்வு பெற்ற நீதிபதி சுதன்சூ துலியா தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து அந்த குழு ஆளுநர் மற்றும் அரசு அமைத்த குழுவில் இருந்து இறுதி பட்டியலை தயாரித்து வழங்கியது. இந்த குழு அறிக்கை பட்டியலை தயாரித்து வழங்கியும் கேரளா ஆளுநர் துணை வேந்தரை நியமிக்கவில்லை . இதை அடுத்து ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கேரளா அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஆளுநர் தரப்பு வழக்கறிஞர், அந்த குழு அளித்த அறிக்கையை ஆளுநர் இன்னும் பார்க்கவில்லை என்று தெரிவித்தார். அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், ‘ஏன் அறிக்கையை இன்னும் பார்க்கவில்லை?. அந்த அறிக்கை என்பது இது சாதாரண காகிதம் அல்ல, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தயாரித்த வழங்கி உள்ள அறிக்கை ஆகும். அது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
அந்த பட்டியல் அடிப்படையில் உரிய முடிவுகளை எடுக்க வேண்டும், பல்கலைகழக துணைவேந்தரை நியமிக்க வேண்டும். குறிப்பாக இந்த விவகாரத்தில் கேரளா ஆளுநர் விரைவில் முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம் . அந்த முடிவு உச்ச நீதிமன்றத்திற்கு வரும்போது அது சரியா ? தவறா? இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்’ என்று கூறி தெரிவித்தனர்.

