சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: எப்படிப்பட்ட தடையையும் கல்வியைக் கொண்டு கடந்திடலாம், வாழ்வில் உயர்ந்திடலாம் என்று வாழ்ந்து காட்டிய அறிவியல் மேதை - முன்னாள் குடியரசு தலைவர் - பாரத ரத்னா அப்துல் கலாம் பிறந்தநாள்.
உயர்கல்விக்காக நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நமது மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் தன்னிறைவுக்கும் உழைத்தால், அதுதான் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு செலுத்தும் மிகச்சிறந்த நன்றிக்கடன்.