Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அப்துல் கலாம் கனவில் உதித்த திட்டம்..அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமான சோதனை

டெல்லி: கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த வெற்றியின் நாட்டின் பாதுகாப்புத்துறையில் ஒரு முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது. இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி என் ஏவுகணை தயாரிக்க கூடாது என முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் கனவில் உதித்த திட்டம் தான் இது. அக்னி ஏவுகணையின் 5வது தலைமுறை ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒடிசா மாநிலம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து ஆகஸ்ட் 20ஆம் தேதி இந்த சோதனை நடத்தப்பட்டது. 5,000 கிலோ மீட்டர் முதல் 7,500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.

அதாவது ஐரோப்பா, ஆப்பிரிக்கா தூரம் வரை செல்லும் வலிமை கொண்டது இந்த அக்னி-5 ஏவுகணை. முக்கியமாக அக்னி-5 ஏவுகணையில் எம்.ஐ.ஆர்.வி. எனப்படும் ஒரே நேரத்தில் பல இலக்குகளை அவினாவின தொழில் நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஆபரேஷன் சிந்தூரில் மோதலில் பிரமோஸ் ஏவுகணைகள் சிறப்பாக செயல்பட்டது. உலக நாடுகளை ஈர்த்த நிலையில் அக்னி-5 ஏவுகணையின் சோதனை வெற்றி இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதிக்கு மேலும் ஒரு உதவேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்துல் கலாமின் கனவை மெய்ப்பிக்கும் விதமாக அவர் பெயரிடப்பட்ட தீவிலேயே இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.