திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆவணி மாத பூஜைகள் நாளை தொடங்குகின்றன. இதை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. நேற்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை, களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். இன்று தந்திரி மகேஷ் மோகனர் தலைமையில் லட்சார்ச்சனை நடைபெறும். வரும் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆவணி மாத பூஜைகள் நிறைவடையும். சபரிமலையில் பலத்த மழை பெய்வதால் பக்தர்கள் பம்பையில் குளிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement