சண்டிகர்: பஞ்சாபில் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. ஹர்மீத் சிங் தப்பி ஓடினார். பஞ்சாபில் காவல் நிலையத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஹர்மீத் சிங் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. எம்.எல்.ஏ. ஹர்மீத் சிங்குக்கு அறிமுகமான பெண் தந்த புகாரில் ஹர்மீத் சிங் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பலாத்கார வழக்கு பதிவு செய்ததால் எம்.எல்.ஏ. ஹர்மீத் சிங் பதன் மஜ்ராவை போலீசார் கைது செய்தனர். அப்போது செல்லும் வழியில் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து எம்எல்ஏ ஹர்மீத் சிங் போலீசார் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
கர்னாலில் எம்.எல்.ஏ. ஹர்மீத் சிங், அவரது கூட்டாளிகள் போலீஸ் மீது துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. போலீஸ் பிடியில் இருந்த தப்பிச் சென்றபோது ஹர்மீத் சிங்கின் வாகனம் மோதி காவலர் காயம் அடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வழக்கில் கைதான ஹர்மீத் சிங்கை கர்னால் காவல் நிலையம் அழைத்துச் சென்றபோது தப்பி சென்ற சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாகி இருக்கும் எம்.எல்.ஏ ஹர்மீத் சிங்கை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே வழக்கு தொடர்ந்த பெண், ஏற்கெனவே ஹர்மீத் உடன் சேர்ந்து வாழ்ந்தவர் என்று அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். ஹர்மீத் சிங் மீது புகார் கூறிய பெண் தொடர்ந்த வேறொரு வழக்கு ஐகோர்ட்டால் விசாரிக்கப்பட்டது. ஹர்மீத் சிங்குடன் சேர்ந்து வாழ்ந்ததாக அந்தப் பெண் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததாக வக்கீல் விளக்கம் அளித்துள்ளார்.