புதுடெல்லி: ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் ஆதார் ஓ.டி.பி கட்டாயம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் ஆலந்த் தொகுதியில் ஆன்லைன் வாயிலாக வாக்காளர் நீக்க படிவங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் வலைதளம் மற்றும் செயலியில் இ-சைன் என்ற புதிய அம்சத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய வசதியின்படி, இனி ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி மூலம், ஒப்புதல் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement