சென்னை: வங்கக் கடலில் வரும் 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் வலுப்பெறும். 24ம் தேதிக்கு பின் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தகவல் தெரிவித்தது.
+
Advertisement


