சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு நிதித்துறையின் அறிவிக்கையின் வரையறைகளின்படி வழங்கப்பட்ட 8.27% தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்கடன் 2025 நிலுவைத் தொகையானது டிசம்பர் 23ம் தேதி அன்று 22ம் நாள் உட்பட்ட உரிய நாளது வரையிலான வட்டித் தொகையுடன் திருப்பிச் செலுத்தப்படும் என்று பொதுத் தகவலுக்காக அறிவிக்கப்படுகிறது. கடன் பத்திரங்களை பொறுத்தமட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள வங்கிக்கு அல்லது கருவூலத்திற்கு மற்றும் சார் கருவூலத்திற்கு அல்லது பாரத ஸ்டேட் வங்கியின் கிளைக்கு நேர்விற்கேற்ப அவர்களுடைய வங்கிக் கணக்கின் உரிய விவரங்களை அளிக்க வேண்டும். வங்கிக் கணக்கில் உரிய விவரங்கள் இல்லாத மின்னணு மூலம் நிதிகளை வரவு வைப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்படாத நேர்வில், உரிய நாளில் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக 8.27% தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்கடன், 2025 தொடர்பான கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்கள், அவர்களுடைய கடன் பத்திரங்களை, 20 நாட்களுக்கு முன்னதாகவே, பொதுக் கடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
+
Advertisement



