7 ஆண்டு வக்கீலாக பணியாற்றினால் தான் மாவட்ட நீதிபதியாக நியமனம்: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
புதுடெல்லி: கேரள மாநிலத்தில் மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட ஒருவர் வழக்கறிஞராக பயிற்சி பெறவில்லை எனக்கூறி நியமன ஆணையை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது “ஏழு ஆண்டுகள் ெதாடர்ச்சியாக வழக்கறிஞராக பணியாற்றி இருந்தால் மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்ய தகுதி பெறுவார். அனைவருக்குமான சம நிலையை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நீதிபதி மற்றும் கூடுதல் நீதிபதி பதவி விண்ணப்பத்திற்கான குறைந்தபட்ச வயது 35 என விண்ணப்ப தேதியில் பூர்த்தியாகி இருக்க வேண்டும் ” என உத்தரவிட்டனர்.