நியூயார்க்: உலகெங்கிலும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்னைகளை ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கவனித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அமைப்பில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில், வரும் 2026 முதல் 2028 வரையிலான உறுப்பினர் பதவிக்கான தேர்தல் கடந்த 14ம் தேதி நடந்தது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், இந்தியா 7வது முறையாக தேர்வாகி உள்ளது. இது குறித்து ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் தனது சமூக ஊடக பதிவில், ‘‘2026-28ம் ஆண்டுக்கான மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இந்தியா 7வது முறையாக தேர்வாகி உள்ளது. இது, மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களுக்கான இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது’’ என்றார். இந்தியாவின் 3 ஆண்டு பதவிக்காலம் வரும் 2026 ஜனவரி 1ம் தேதி தொடங்குகிறது.
+
Advertisement