லக்னோ: உத்தரப்பிரதே மாநிலம் மிர்சாப்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 5 பக்தர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர். சுனார் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பக்தர்கள் மீது பயணிகள் ரயில் மோதியது. ஹவுராவில் இருந்து கல்கா சென்றுகொண்டிருந்த கல்கா விரைவு ரயில், பக்தர்கள் மீது மோதியது. கங்கை நதியில் புனித நீராடுவதற்காக சுனார் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். கார்த்திக் பூர்ணிமாவை ஒட்டி கங்கையில் குளிக்க சுனார் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியது
+
Advertisement
