சென்னை: 79வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.79வது சுதந்திர தினவிழா வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடபட உள்ளது. சுதந்திர தினவிழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க முயற்சி நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரயில் நிலையங்கள் , பஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 79வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரமும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரமும் முன்னதாக வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.