தண்டையார்பேட்டை: நாட்டின் 79வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் முழுவதும் நேற்று ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார் நேற்று நடைமேடைகள், பயணிகள் தங்குமிடம், நுழைவாயில் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்ட்ரல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் ரயில் நிலையத்தின் நடைமேடைகள், ரயில்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய்கள் மூலமாக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
+
Advertisement