சென்னை: சென்னை- வேலூர் இடையே 142 கி.மீ. தொலைவுக்கு 6 வழிச்சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. 3 சிப்காட் தொழிற்பூங்காக்களை இணைக்கும் வகையில் 6 வழிச்சாலை அமைக்க தமிழ்நாடு-நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. ஒரகடம், செய்யாறு சிப்காட், வேலூர் மாவட்டத்தில் அமையும் சிப்காட் தொழிற்பூங்காவை புதிய 6 வழிச்சாலை இணைக்கும். புதிதாக அமைய உள்ள 6 வழிச்சாலை மூலம் காட்டுப்பள்ளி, எண்ணூர் துறைமுகங்களுக்கு சரக்கு போக்குவரத்து எளிதாகும். சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் வேலூர் இடையேயான போக்குவரத்து நெரிசலை குறைக்கும்
+
Advertisement