சென்னை: 6 மாவட்ட நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குள்ளான காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி செம்மலை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை கைது செய்ய உத்தரவிட்டு சர்ச்சையில் சிக்கியவர் நீதிபதி செம்மல். காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செம்மல், அரியலூரில் நிரந்தர லோக் அதாலத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை வணிக வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி தீப்தி அறிவுநிதி, காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
* திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிபதி வேல்முருகன், தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி ஜெ.சந்திரன், மேட்டூர் கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
* தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணா ஜெயா ஆனந்த், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
* சென்னை குடும்ப நல கூடுதல் முதன்மை நீதிபதி தேன்மொழி, திருப்பத்தூர் மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.